அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:29-31
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:29-31 TRV
பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்த தேரை நோக்கிப் போய், அதனுடன் இணைந்துகொள்” என்றார். அவ்விதமாக, பிலிப்பு ஓடிச் சென்று அதனுடன் இணைந்து கொண்டபோது, அந்த அதிகாரி இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. அப்போது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பது உனக்குப் புரிகிறதா?” எனக் கேட்டான். அதற்கு அவன், “யாராவது அதை எனக்கு விபரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி புரியும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான்.