அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25-26
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25-26 TRV
ஏறக்குறைய நள்ளிரவு வேளை பவுலும் சீலாவும் மன்றாடிக் கொண்டும் இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருந்தார்கள். சிறையிலிருந்த மற்றைய கைதிகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அத்திவாரங்கள் அசைந்தன. அப்போது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன.