YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் முன்னுரை

முன்னுரை
இந்தக் கடிதம் கி.பி. 51 ஆம் வருடத்தில் அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. இதை அவர் கொரிந்து பட்டணத்திலிருந்து எழுதினார். பவுல் இக்கடிதத்திற்கு முன்பு இன்னொரு கடிதத்தையும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை வாசித்ததன் காரணமாகவோ, அல்லது பவுலினால் எழுதப்பட்டது போன்ற வேறொரு போலியான கடிதத்தை வாசித்ததன் காரணமாகவோ தெசலோனிக்கேயாவிலுள்ள விசுவாசிகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துக் குழப்பம் அடைந்தவர்களாய் இருந்தார்கள். இதனால் கிறிஸ்து நிச்சயமாகவே திரும்பி வருவார் என்றும், அவர் விசுவாசிகளுக்கு ஆறுதல் அளித்து, விசுவாசிகளைத் துன்புறுத்துகின்றவர்களுக்குத் தண்டனை கொடுப்பார் என்றும் பவுல் எழுதினார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in