1 பேதுரு 3:15-16
1 பேதுரு 3:15-16 TRV
ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்று அவரை கனம் பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கின்ற ஒவ்வொருவருக்கும், பதில் சொல்வதற்கு எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள். ஆனால் தயவுடனும், மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் நல்ல மனசாட்சி உடையவர்களாயும் இருக்க வேண்டும். அப்போது கிறிஸ்துவுக்குள்ளான உங்களது நன்னடத்தையை இகழ்ந்து பேசுகின்றவர்கள் உங்களை அவதூறாகப் பேசியதற்காக வெட்கமடைவார்கள்.