1 பேதுரு 2:24-25
1 பேதுரு 2:24-25 TRV
நாம் பாவங்களுக்கு மரணித்தவர்களாக இனிமேல் நீதியின் வழியில் வாழ்வதற்காக அவர் தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின் மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள்.” ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப் போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.” ஆனால் இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், பாதுகாவலருமாய் இருக்கின்ற கிறிஸ்துவிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.