YouVersion Logo
Search Icon

சகரியா 9

9
பிற நாடுகளுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
1தேவனிடம் இருந்து ஒரு செய்தி, ஆதிராக் நாட்டைப் பற்றியும், அவனது தமஸ்கு தலைநகரத்தைப் பற்றியும் எதிராக உள்ள கர்த்தருடைய செய்தி. “இஸ்ரவேலின் சகல கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மட்டுமே தேவனைப் பற்றித் தெரிந்தவர்களல்ல. அவரிடம் ஒவ்வொருவரும் உதவி கேட்கிறார்கள். 2ஆமாத், ஆதிராக் நாட்டின் எல்லை. தீரு, சீதோன் நகரத்தார் திறமையும், மதிநுட்பமும் உடையவர்களாக இருந்தபோதிலும், இச்செய்தி அவர்களுக்கு எதிரானது. 3தீரு ஒரு கோட்டையைப் போன்று கட்டப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் வெள்ளியை வசூல் செய்தார்கள். அது புழுதியைப் போல் மிகுதியாக இருந்தது. பொன்னானது களி மண்ணைப்போன்று சாதாரணமாக இருந்தது. 4ஆனால் நமது அதிகாரியாகிய கர்த்தர் அவற்றை எடுத்துக்கொள்வார். அவர் ஆற்றல் மிக்க கப்பல் படையை அழிப்பார். நகரமானது நெருப்பால் அழிக்கப்படும்.
5“அஸ்கலோனில் உள்ள ஜனங்கள் அவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் அஞ்சுவார்கள். காத்சா ஜனங்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். எக்ரோன் ஜனங்கள் நிகழ்வதைப் பார்த்து நம்பிக்கையை இழப்பார்கள். காத்சாவில் எந்த ராஜாவும் விடுபடமாட்டான். அஸ்கலோனில் எவரும் வாழமாட்டார்கள். 6அஸ்தோத்தில் உள்ள ஜனங்கள் தங்களது உண்மையான தந்தை யாரென்று அறியமாட்டார்கள். நான் தற்பெருமைமிக்க பெலிஸ்திய ஜனங்களை முழுவதுமாக அழிப்பேன். 7அவர்கள் இரத்தமுள்ள இறைச்சியை உண்ணமாட்டார்கள். வேறு உண்ணக்கூடாத உணவையும் உண்ணமாட்டார்கள். மீதியுள்ள பெலிஸ்திய ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் யூதாவின் மற்றுமொறு கோத்திரமாக இருப்பார்கள். எக்ரோன் ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக எபூசியர்களைப்போல இருப்பார்கள். நான் எனது நாட்டைக் காப்பாற்றுவேன். 8நான் பகைவர்கள் படைகளை என் நாட்டின் வழியாகப் போக அனுமதிக்கமாட்டேன். நான் அவர்கள் என் ஜனங்களைத் துன்புறுத்தும்படி விடமாட்டேன். என் சொந்தக் கண்களால் எனது ஜனங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு துன்புற்றார்கள் எனப் பார்த்தேன்.”
வருங்கால ராஜா
9சீயோன் நகரமே, மகிழ்ச்சியாயிரு.
எருசலேம் ஜனங்களே, மகிழ்ச்சியோடு கூவுங்கள்.
பார், உனது ராஜா உன்னிடம் வருகிறார்.
அவர் நல்லவர், வெற்றிபெற்ற ராஜா.
ஆனால் அவர் பணிவுள்ளவர்.
அவர் கழுதை மேல் வந்துக்கொண்டிருக்கிறார்.
இது வேலை செய்யக்கூடிய கழுதைக்கு பிறந்த இளங்கழுதை.
10ராஜா கூறுகிறார்: “நான் எப்பிராயீமின் இரதங்களை அழித்தேன்.
எருசலேமின் குதிரைவீரர்களை அழித்தேன்.
நான் போரில் பயன்படும் வில்களை அழித்தேன்.”
அவ்வரசன் சமாதனத்தின் செய்தியை நாடுகளுக்கு அறிவிப்பான்.
அவன் கடல் விட்டு கடலையும் ஐபிராத்து நதி தொடங்கி
பூமியிலுள்ள தொலைதூர இடங்களையும் ஆள்வான்.
கர்த்தர் தனது ஜனங்களைப் காப்பாற்றுவார்
11எருசலேமே, உனது உடன்படிக்கையை நாம் இரத்தத்தால் முத்தரித்தோம்.
எனவே நான் தரையில் துவாரங்களில் அடைப்பட்ட ஜனங்களை விடுதலை பண்ணுவேன்.
12கைதிகளே, வீட்டிற்குப் போங்கள்.
இப்பொழுது நீங்கள் நம்பிக்கைக்கொள்ள இடமுண்டு.
நான் திரும்பி உங்களிடம் வருவேன்
என்று இப்பொழுது சொல்கிறேன்.
13யூதாவே, நான் உன்னை வில்லைப் போல் பயன்படுத்துவேன்.
எப்பிராயீமே, நான் உன்னை அம்பாகப் பயன்படுத்துவேன்.
நான் உங்களை கிரேக்க நாட்டாருக்கு எதிராக
வலிமையுள்ள வாளாகப் பயன்படுத்துவேன்.
14கர்த்தர் அவர்களிடம் தோன்றுவார்.
அவர் தமது அம்புகளை மின்னலைப் போன்று எய்வார்.
எனது அதிகாரியாகிய கர்த்தர் எக்காளம் ஊதுவார்.
படையானது பாலைவனப் புயல்போல் விரையும்.
15சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அவர்களைக் காப்பார்.
வீரர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்காகக் கற்களையும், கவண்களையும் பயன்படுத்துவார்கள்.
அவர்கள் பகைவரின் இரத்தத்தை வடியச் செய்வார்கள்.
அது திராரட்சைரசத்தைப் போன்று பாயும்.
அது பலிபீடத்தின் மூலைகளில் வழியும் இரத்தத்தைப் போன்று இருக்கும்.
16அந்த நேரத்தில், அவர்களின் தேவனாகிய கர்த்தர்,
மேய்ப்பன் ஆடுகளைக் காப்பது போல காப்பார்.
அவருக்கு அவர்கள் விலைமதிப்பற்றவர்கள்.
அவர்கள் அவரது நாட்டில் ஒளிவீசும் நகைகளைப் போன்றவர்கள்.
17எல்லாம் நல்லதாகவும், அழகானதாகவும் இருக்கும்.
அங்கே அற்புதமான அறுவடை இருக்கும்.
ஆனால் அது உணவாகவும், திராட்சைரசமாகவும் இருக்காது.
இல்லை, இது இளம் ஆண்களும், பெண்களுமாய் இருக்கும்.

Currently Selected:

சகரியா 9: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சகரியா 9