YouVersion Logo
Search Icon

ஓசியா 7

7
1“நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன்.
பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள்.
ஜனங்கள் சமாரியாவின் பொய்களை அறிவார்கள்.
ஜனங்கள் நகரத்திற்குள் வந்துபோகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள்.
2அந்த ஜனங்கள் நான் அவர்களின் குற்றங்களை நினைப்பேன் என்பதை நம்பமாட்டார்கள்.
அவர்கள் செய்த கெட்டவைகளெல்லாம் சுற்றிலும் உள்ளன.
நான் அவர்களது பாவங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.
3அவர்களது தீமை அவர்களின் ராஜாவை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
அவர்களது அந்நியத் தெய்வங்கள் அவர்களின் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
4அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான்.
அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான்.
அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை.
இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர்.
5நம்முடைய ராஜாவின் நாளில் அவர்கள் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். அவர்கள் குடி விருந்துகளைக் கொடுக்கிறார்கள்.
தலைவர்கள் திராட்சைரசத்தின் சூட்டால் நோயடைகின்றனர். எனவே ராஜாக்கள் தேவனைப் பரிகாசம் செய்யும் ஜனங்களோடு சேருகின்றார்கள்.
6ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள்.
அவர்களது இதயங்கள் சூட்டடுப்பைப் போன்று கிளர்ச்சியடைகின்றன.
அவர்களின் ஆர்வம் இரவு முழுவதும் எரியும்.
காலையில் அது நெருப்பாய் எரியும்.
7அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள்.
அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள்.
அவர்களின் ராஜாக்கள் அனைவரும் விழுந்தார்கள்.
அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை.”
இஸ்ரவேலும் மற்ற தேசங்களும்
8“எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலந்திருக்கிறான்.
எப்பிராயீம் இரண்டு பக்கமும் வேகாத அப்பத்தைப் போன்று இருக்கிறான்.
9அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள்.
ஆனால் எப்பிராயீம் இதை அறியவில்லை எப்பிராயீம் மேல் நரை மயிர்கள் தெளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் எப்பிராயீம் இதனை அறியவில்லை.
10எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது.
ஜனங்களுக்குப் பற்பல தொல்லைகள் இருக்கின்றன.
ஆனால் அவர்கள் இன்னும் தமது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பிப் போகவில்லை.
ஜனங்கள் உதவிக்கு அவரை நோக்கிப் பாக்கவில்லை.
11எனவே, எப்பிராயீம் புரிந்துக்கொள்ளாத பேதையான சிறிய புறாவைப் போலானான்.
ஜனங்கள் எகிப்திடம் உதவிக் கேட்டார்கள்.
ஜனங்கள் அசீரியாவிடம் உதவி கேட்டுப்போனார்கள்.
12அவர்கள் அந்நாடுகளுக்கு உதவிக் கேட்டுப் போனார்கள்.
ஆனால் நான் அவர்களை கண்ணியில் சிக்கவைப்பேன்.
நான் எனது வலையை அவர்கள் மேல் வீசுவேன்.
நான் அவர்களை வானத்துப் பறவைகளைப் போன்று பிடித்து அவர்களை கிழே கொண்டு வருவேன்.
நான் அவர்களை அவர்களது உடன்படிக்கைகளுக்காகத் தண்டிப்பேன்.
13இது அவர்களுக்குக் கேடாகும். அவர்கள் என்னை விட்டு விலகினார்கள்.
அவர்கள் எனக்கு அடிபணிய மறுத்தார்கள்.
எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
நான் அந்த ஜனங்களைக் காப்பாற்றினேன்.
ஆனால் எனக்கு எதிராக அவர்கள் பொய்களைப் பேசுகின்றார்கள்.
14அவர்கள் தம் மனப்பூர்வமாக என்னை எப்பொழுதும் அழைக்கிறதில்லை.
ஆம் அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து அழுகின்றார்கள்.
தானியத்திற்காகவும் புதுத் திராட்சை ரசத்திற்காகவும் கேட்கும்போது தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களின் இதயங்களில் அவர்கள் என்னிடமிருந்து விலகியிருக்கிறார்கள்.
15நான் அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் கைகளை பலப்படுத்தினேன்.
ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் தீய திட்டங்களைப் போட்டிருக்கிறார்கள்.
16ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள்.
ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள்.
ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள்.
பிறகு எகிப்து ஜனங்கள்
அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.”

Currently Selected:

ஓசியா 7: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in