YouVersion Logo
Search Icon

ஆகாய் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 520 ஆம் ஆண்டளவில் இறைவாக்கினன் ஆகாயினால் எழுதப்பட்டது. இறைவாக்கினன் ஆகாய் நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்களில் ஒருவன் என்றும் கருதப்படுகிறது. நாடு கடத்தப்பட்டவர்களாயிருந்து, எருசலேமுக்குத் திரும்பிவந்து இஸ்ரயேலர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும் காலத்திலேயே ஆகாய் இறைவாக்குரைத்தான். ஆலயம் கட்டுகிறவர்களை ஊக்குவிப்பதாகவே அவனது செய்தி அமைந்திருந்தது. குறிப்பாக மக்களின் தலைவனான செருபாபேலுக்கும், ஆசாரியனான யோசுவாவுக்கும் எருசலேமிலிருந்த மக்களுக்கும் அவன் இறைவாக்கு உரைத்தான். இவனுடைய செய்தியின் பிரதிபலனாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. கி.மு. 516 இல் திரும்பவும் அர்ப்பணம் செய்யப்பட்டது. தமது மக்களுடைய வாழ்வில் இறைவன் கொண்டிருக்கும் ஈடுபாடும், இஸ்ரயேல் மக்களின் நன்மைக்காக இறைவழிபாட்டிற்குரிய இடம் அவசியம் என்பதும் இதில் வலியுறுத்தப்படுகிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in