YouVersion Logo
Search Icon

1 நாளாகமம் முன்னுரை

முன்னுரை
1 நாளாகமம், 2 நாளாகமம் ஆகிய புத்தகங்கள் எபிரெய வேதாகமத்தில் ஒரே புத்தகமாகவே உள்ளன. இப்புத்தகம் நாடுகடத்தப்பட்டு திரும்பி வந்திருந்த இஸ்ரயேலரை உற்சாகப்படுத்துவதற்கும், தைரியப்படுத்துவதற்கும் எஸ்றாவினால் எழுதப்பட்டது. இங்கு ஆதாமிலிருந்து தொடங்கிய மேன்மையான பூர்வீக வரலாற்றிலிருந்து, பாபிலோனியரால் இஸ்ரயேலர் நாடுகடத்தப்படும் வரையுள்ள வரலாற்றை எஸ்றா மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
1 நாளாகமத்தில் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் யூதா மக்களின் வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்பின் அரசன் தாவீதின் ஆட்சி, உடன்படிக்கைப்பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்படல், ஆலயத்தைக் கட்டுவதற்கும் அங்கு வழிபடுவதற்குமாக தாவீதினால் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தங்கள் ஆகியனபற்றி கூறப்படுகிறது. தாவீதின் மரணத்துடன் இப்புத்தகம் முடிவடைகிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in