1
ரோமர் 8:28
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அத்தோடு இறைவனின் நோக்கத்தின்படி அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கின்றவர்களின் நன்மைக்காக அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன என்று அறிந்திருக்கிறோம்.
Compare
Explore ரோமர் 8:28
2
ரோமர் 8:38-39
ஏனெனில் மரணமோ வாழ்வோ, வானவர்களோ ஆளுகையோ, நிகழ்காரியமோ வருங்காரியமோ, வல்லமைகளோ, வானத்திலோ ஆழத்திலோ அல்லது படைக்கப்பட்டவைகளில் உள்ள வேறு எதுவுமோ நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலிருக்கும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற உறுதி எனக்குண்டு.
Explore ரோமர் 8:38-39
3
ரோமர் 8:26
அவ்விதமாகவே ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கின்றார். நாம் எதற்காக மன்றாட வேண்டும் என்று நாம் அறியாதிருக்கின்றபடியால், வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஆழ்ந்த பெருமூச்சோடு, ஆவியானவர் தாமே நமக்காகப் பரிந்து மன்றாடுகின்றார்.
Explore ரோமர் 8:26
4
ரோமர் 8:31
ஆகையால், இவைகளைப்பற்றி நாம் என்ன சொல்வோம்? இறைவன் நம் சார்பாக இருந்தால் நமக்கு எதிராய் இருப்பவர் யார்?
Explore ரோமர் 8:31
5
ரோமர் 8:1
ஆகவே, இப்போது கிறிஸ்து இயேசுவுடன் இணைந்து இருக்கின்றவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
Explore ரோமர் 8:1
6
ரோமர் 8:6
பாவ மனித இயல்பில் மனதைப் பதித்தால் விளைவது மரணம், ஆவியில் மனதை பதித்தாலோ விளைவது வாழ்வும் சமாதானமும் ஆகும்.
Explore ரோமர் 8:6
7
ரோமர் 8:37
ஆனாலும் இவை எல்லாவற்றிலும், நம்மீது அன்பு வைத்தவரின் மூலமாய் நாம் வெற்றி மேல் வெற்றி அடைகின்றோம்.
Explore ரோமர் 8:37
8
ரோமர் 8:18
தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள், நம்மில் வெளிப்படப் போகின்ற மகிமையோடு ஒப்பிடத்தக்கவையல்ல என்றே நான் எண்ணுகிறேன்.
Explore ரோமர் 8:18
9
ரோமர் 8:35
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? துன்பமா, வேதனையா, துன்புறுத்தலா, பஞ்சமா, நிர்வாணமா, ஆபத்தா, கொடூர வன்முறையா?
Explore ரோமர் 8:35
10
ரோமர் 8:27
பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி, பரிசுத்தவான்களுக்காகப் பரிந்து மன்றாடுகின்றபடியால் எமது மனதை ஆராய்ந்தறியும் இறைவன், ஆவியானவருடைய மனதையும் அறிந்திருக்கிறார்.
Explore ரோமர் 8:27
11
ரோமர் 8:14
ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுகின்றவர்களே இறைவனுக்கு உரிய பிள்ளைகளாக இருக்கின்றார்கள்.
Explore ரோமர் 8:14
12
ரோமர் 8:5
பாவ மனித இயல்பின்படி வாழ்கின்றவர்கள், தங்கள் மனதை பாவ மனித இயல்புக்கு உரியவற்றில் பதித்திருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியின்படி வாழ்கின்றவர்களோ ஆவியின் காரியங்களில் தங்கள் மனதைப் பதித்திருக்கிறார்கள்.
Explore ரோமர் 8:5
13
ரோமர் 8:32
தமது சொந்த மகனைக்கூட விட்டுவைக்காமல் அவரை நம் எல்லோருக்காகவும் ஒப்படைத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்கு கிருபையாக வழங்காதிருப்பது எப்படி?
Explore ரோமர் 8:32
14
ரோமர் 8:16-17
நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சாட்சி அளிக்கின்றார். நாம் இப்போது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதனால் சொத்துரிமை உடையவர்களாயும் இருக்கின்றோம். நாம் இறைவனுடைய சொத்துக்கு உரிமை உடையவர்களாயும் கிறிஸ்துவோடு சக சொத்துரிமைக்காரர்களாயும் இருந்து, அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம்.
Explore ரோமர் 8:16-17
15
ரோமர் 8:7
பாவ மனித இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனம் இறைவனுடன் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடங்கி நடப்பதில்லை, அப்படி நடக்கவும் இயலாதிருக்கிறது.
Explore ரோமர் 8:7
16
ரோமர் 8:19
இறைவனுடைய பிள்ளைகள் வெளிப்படுத்தப்படுவதைக் காண, படைப்பானது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றது.
Explore ரோமர் 8:19
17
ரோமர் 8:22
நாம் அறிந்தபடி, இதுவரை முழு படைப்பும் பிரசவ வேதனைப்பட்டுப் புலம்புகிறது.
Explore ரோமர் 8:22
Home
Bible
Plans
Videos