ஆகவே, நாம் விசுவாசத்தின் மூலமாக நீதிமான்கள் ஆக்கப்பட்டிருக்கின்றபடியால், நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாய் இறைவனுடன் சமாதானமுள்ளவர்களாய் இருக்கின்றோம். அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் விசுவாசத்தினால் பிரவேசித்து, அந்தக் கிருபையிலே நிலைபெற்று, இறைவனுடைய மகிமையில் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைகிறோம்.