1
வெளிப்படுத்தல் 1:8
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
“தொடக்கமும் முடிவும் நானே, இருக்கின்றவரும் இருந்தவரும் வரப் போகின்றவருமாகிய எல்லாம் வல்லர் நானே” என்று இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார்.
Compare
Explore வெளிப்படுத்தல் 1:8
2
வெளிப்படுத்தல் 1:18
நானே வாழ்கின்றவர். நான் மரணித்தேன், ஆனால் இதோ நான் என்றென்றும் உயிருடன் வாழ்கின்றவராய் இருக்கின்றேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய சாவிகளை நானே வைத்திருக்கிறேன்.
Explore வெளிப்படுத்தல் 1:18
3
வெளிப்படுத்தல் 1:3
இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதனால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கின்றவனும், இதைக் கேட்கின்றவர்களும், இதில் எழுதியிருப்பதைக் கடைப்பிடித்து நடந்துகொள்வோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Explore வெளிப்படுத்தல் 1:3
4
வெளிப்படுத்தல் 1:17
நான் அவரைப் பார்த்தபோது மரணமடைந்தவனைப் போல் அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்போது அவர் தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன்.
Explore வெளிப்படுத்தல் 1:17
5
வெளிப்படுத்தல் 1:7
“இதோ, இயேசு மேகங்கள் மீது வருகின்றார்” அத்துடன், “எல்லாக் கண்களும் அவரைக் காணும், அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்;” பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் பொருட்டு புலம்புவார்கள்.” அது அப்படியே ஆகட்டும்! ஆமென்.
Explore வெளிப்படுத்தல் 1:7
Home
Bible
Plans
Videos