1
எபிரேயர் 7:25
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆதலால், தம் மூலமாக இறைவனிடத்தில் வருகின்றவர்களை பரிபூரணமாய் இரட்சிக்க இயேசு வல்லவராய் இருக்கின்றார். ஏனெனில், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுவதற்காக இயேசு என்றென்றும் வாழ்கின்றார்.
Compare
Explore எபிரேயர் 7:25
2
எபிரேயர் 7:26
இப்படிப்பட்ட தலைமை மதகுரு நமது தேவைக்குப் பொருத்தமானவராகவே இருக்கின்றார். இவர் பரிசுத்தமுள்ளவரும், குற்றம் சாட்டப்படாதவரும், தூய்மையானவரும், பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டவரும், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவருமாக இருக்கின்றார்.
Explore எபிரேயர் 7:26
3
எபிரேயர் 7:27
மற்ற தலைமை மதகுருக்கள், முதலாவது தங்களுடைய பாவங்களுக்காகவும், பின்பு மனிதருடைய பாவங்களுக்காகவும் ஒவ்வொரு நாளும் பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களைப் போல், அவ்வாறு இயேசு பலி செலுத்த வேண்டியதில்லை. இவரோ தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தபோது அவர்களுடைய பாவங்களுக்காக ஒரே முறை பலியானார்.
Explore எபிரேயர் 7:27
Home
Bible
Plans
Videos