1
எபிரேயர் 5:14
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
முதிர்ச்சி அடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியின் மூலமாக, தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
Compare
Explore எபிரேயர் 5:14
2
எபிரேயர் 5:12-13
உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். திட உணவை அருந்த முடியாதவர்களாய், மீண்டும் பாலை அருந்தும் நிலைக்குத் திரும்பிவிட்டீர்கள். பாலை அருந்துகின்றவன் இன்னும் குழந்தையாகவே இருக்கின்றான். இதனால் அவன் நீதியைப் பற்றிய படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கின்றான்.
Explore எபிரேயர் 5:12-13
3
எபிரேயர் 5:8-9
இயேசு இறைவனின் மகனாய் இருந்தும்கூட தாம் அனுபவித்த பாடுகளின் மூலமாகவே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். இப்படியாக இயேசு முழு நிறைவெய்திய பின்னர், தமக்குக் கீழ்ப்படிகின்ற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் மூலாதாரம் ஆகினார்.
Explore எபிரேயர் 5:8-9
4
எபிரேயர் 5:7
இயேசு பூமியில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி சத்தமாய்க் கதறி, கண்ணீர்விட்டு தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பின் காரணமாக அவருடைய மன்றாடுதல் கேட்கப்பட்டது.
Explore எபிரேயர் 5:7
Home
Bible
Plans
Videos