எபிரேயர் 5:12-13
எபிரேயர் 5:12-13 TRV
உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். திட உணவை அருந்த முடியாதவர்களாய், மீண்டும் பாலை அருந்தும் நிலைக்குத் திரும்பிவிட்டீர்கள். பாலை அருந்துகின்றவன் இன்னும் குழந்தையாகவே இருக்கின்றான். இதனால் அவன் நீதியைப் பற்றிய படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கின்றான்.