1
எபிரேயர் 1:3
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இறைவனுடைய மகனே அவருடைய மகிமையின் ஒளியாயும், அவருடைய இறை இயல்பின் மிகத் துல்லியமான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றார். இவரே தம்முடைய வல்லமையான வார்த்தையினாலே எல்லாவற்றையும் பராமரித்துத் தாங்குகிறார். இவர் பாவங்களுக்கான சுத்திகரிப்பை ஏற்படுத்தி முடித்த பின்பு, பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.
Compare
Explore எபிரேயர் 1:3
2
எபிரேயர் 1:1-2
இறைவன், முற்காலத்தில் பல முறை பல்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார். ஆனால், நம்மோடு இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார்.
Explore எபிரேயர் 1:1-2
3
எபிரேயர் 1:14
இறைதூதர்களெல்லோரும் சேவை செய்யும் ஆவிகள் அல்லவா? இரட்சிப்பை உரிமையாக்கிக்கொள்ளப் போகின்றவர்களுக்குப் பணிவிடை செய்யும்படி அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?
Explore எபிரேயர் 1:14
4
எபிரேயர் 1:10-11
இறைவன் மேலும் சொன்னதாவது, “ஆண்டவரே, நீர் ஆதியிலே பூமிக்கு அத்திவாரங்களை அமைத்தீர், வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன. அவையோ அழிந்து போகும், ஆனால் நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடையைப் போல பழையதாய்ப் போகும்.
Explore எபிரேயர் 1:10-11
Home
Bible
Plans
Videos