எபிரேயர் 1:1-2
எபிரேயர் 1:1-2 TRV
இறைவன், முற்காலத்தில் பல முறை பல்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார். ஆனால், நம்மோடு இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார்.