1
சங்கீத புத்தகம் 51:10
பரிசுத்த பைபிள்
தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்! எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
Compare
Explore சங்கீத புத்தகம் 51:10
2
சங்கீத புத்தகம் 51:12
உமது உதவி என்னை மகிழ்விக்கிறது! மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும். எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
Explore சங்கீத புத்தகம் 51:12
3
சங்கீத புத்தகம் 51:11
என்னைத் தூரத் தள்ளாதேயும்! என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
Explore சங்கீத புத்தகம் 51:11
4
சங்கீத புத்தகம் 51:17
தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
Explore சங்கீத புத்தகம் 51:17
5
சங்கீத புத்தகம் 51:1-2
தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். என் பாவங்களை அழித்துவிடும். தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
Explore சங்கீத புத்தகம் 51:1-2
6
சங்கீத புத்தகம் 51:7
ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும். பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
Explore சங்கீத புத்தகம் 51:7
7
சங்கீத புத்தகம் 51:4
நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன். உமது முடிவுகள் நியாயமானவை.
Explore சங்கீத புத்தகம் 51:4
Home
Bible
Plans
Videos