“அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால்,
அது உன்னை அரசனாக்குமோ?
உன்னுடைய தகப்பனிடம் உணவும், பானமும் இருக்கவில்லையோ?
நியாயத்தையும், நீதியையும் அவன் செய்தபோது
அவன் செய்த எல்லாம் அவனுக்கு நலமாயிருக்கவில்லையோ?
அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான்.
அதனால் அவனுக்கு எல்லாம் நன்றாய் நடைபெற்றன.
என்னை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் இதுவல்லவோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.