திட்ட விவரம்

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்மாதிரி

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்

3 ல் 1 நாள்

தரிசன வார்த்தைகளை தீர்க்கமாக சொல்லுங்கள் தரிசன வார்த்தைகளை தீர்க்கமாக சொல்லுங்கள் அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஸையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும் , மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஜந்து வார்த்தைகளைப்பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். 1கொரிந்தியர் 14 :19 அன்போடு கூட சிறந்த வரமாகிய தீர்க்கதரிசன உரையை நாடுங்கள். என் சுயநலத்துக்காக அல்ல. பிறரது பக்தி வளர்ச்சிக்கென்று உதவும் இந்த உன்னதமான தரிசன வார்த்தைகளடங்கிய தீர்க்கத்ரிசன வரத்தை பெற்றுக்கொள்ளும்படி ஆசை கொள்ளுங்கள். அந்நிய பாசை பேசுகிறவர் தன்னை வளப்படுத்திக்கொள்ளுகிறார். தரிசன வார்த்தையை பிறர் முன் வைப்பவரோ சபையை வளப்படுத்துகிறார். சபை வளர்ச்சிக்கு பிரயோஜனமாயிருக்கும் வரத்தை பயன் படுத்துங்கள். அறிவை உணர்த்தும் வரம், வெளிப்பாடு தரும் வரம், போதிக்கும் வரம் திருச்சபையில் வெளிப்படட்டும். சப்தங்கள் வல்லமை அல்ல. ஆகாயத்தில் அலைந்து மறைந்து போகும் உணர்வலைகள் அவைகள். கேட்கிறவர்கள் உள்ளத்தில் கிரியை செய்து உணர்வூட்டும் வரங்களை நாடுங்கள். அர்த்தமுள்ள அர்த்தம் கொடுக்கும் மொழிகளே பிறரது மறு உருவாக்கத்துக்கு தேவன் பயன் படுத்தும் தேவன் அருளிய வரம். எனக்கு விளங்காததை இன்னொருவர் பேசுவது மொழிதிறன் அல்ல. அவர் அறிந்ததை எனக்கு பொருள் படுத்தி கூறுவதே மொழியின் வல்லமை. மொழியே தொடர்புக்கென்று எற்படுத்தப்பட்ட ஒன்று. மொழியில் பிறழ்ச்சியும் விளங்காமையும் இருக்குமென்றால் ஒசையிடுகிற வெண்கலமாகும் அது. சபை வளர்ச்சிக்காக உபதேசமும் புத்திமதியும் கொடுக்கும் வரமே ஆவிக்குரிய வரம். ஆவி என்பது ஆகாயத்துக்குறியது அல்ல.ஒரு இருப்பு நிலை. இயல்பானது உண்மையானது பிரத்தியட்சமானது, உணரக்கூடியது. மனமும் இணைந்து செயல் படவேண்டும். மனதை குருடாக்கிவிட்டு வெளி உலகில் மிதக்கும் அனுபவம் அல்ல ஆவிக்குரிய அனுபவத்தில் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜெபித்தாலும் பாடினாலும் ஆவியோடு செய்ய வேண்டும். ஆவியையும் பிரிக்க இயலாது. ஆவியோடும் கருத்தோடும் செய்யவேண்டும். உபதேசமும் புத்திமதியும் சபையை கருத்தில் கொண்டு கருத்தாய் செய்யப்படவேண்டும். உங்கள் உபதேசமும் போதிப்பும் வெளிப்படும் சபை அனைத்தும் ஆமென் என கருத்தாய் சொல்லி பங்கு பெறும் அனுபவமாக இருத்தல் அவசியம். ஆயிரம் மொழி பேசி குழப்பத்தை எற்படுத்தாமல் சில வார்த்தைகளை புத்திமதியாய், உபதேசமாய் சொல்லி பயன் உண்டாக்குங்கள். ஒழுங்கும் கிரமமும் ; இப்படியிருக்க சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள். அந்நிய பாஸைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமுமாய் செய்யப்படக்கடவது 1 கொரிந்தியர் 14 :39,40 அறிவியுங்கள் ! கூறி அறிவியுங்கள் ! அளிக்கப்பட்ட வரங்கள் கொண்டு கிரமத்தோடு அறிவியுங்கள். கூடிவரும் வேளையில் வரங்கள் பகிர்ந்து கொண்டு சபையின் வளர்ச்சிக்கு வேராக அமையுங்கள். சிறு சிறு காரியங்களிலும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளுஙகள். உயர்ந்த எண்ணங்கொண்ட முதிர்ச்சி, சிந்தை, உங்களில் அமையட்டும். மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சபையில் உங்கள் வழங்குதல்கள் இருப்பதாக. வித்தியாசமாய் வேறு பாசை பேசுவது புறஜாதியாருக்கு புரியுமா? சபை கூடி வரும்போது அவரவர் சொந்த அனுபவங்களை பிரசித்தப்படுத்துவதால் புதிதாய் வருகிறவர்களுக்கு அது இடறுதலாகவே அமையும் . அறியாத காரியங்களை அவர்கள் எப்படிஅறிய முடியும்? கேட்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்தைத் தொடுகிற உபதேச புத்திமதியே அவர்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்புதலுக்கு ஏதுவாக்கும். அப்படிப்பட்ட கூறி அறிவித்தல் கூடி வரும்போது நிகழ வேண்டும். தனிப்பட்ட அனுபவங்களை மேடையேற்றுவதல்ல சுவிசேச அறிவிப்பு. மாறாக வேத வாக்கிய போதிப்பின் மூலம் நடை பெறும் மனமாற்றமே நற்செய்தி வழங்குதலால் விளையும் விளைவு. உள்ளான மனிதன் வெளிப்பாடாக சொல்லப்பட்டதை கற்று தன் பாவத்தை மறைக்காமல் அறிக்கை செய்து மனம் கதற வைக்கும் பிரயாசமே உபதேசத்தின் உட்பொருள். கடவுள் உண்மையாகவே இங்கு இருக்கிறாரென அறிக்கைகள் அங்கு தான் எழும். பிறருக்கு விளங்க வைக்கமுடியாத ஒன்றை பிரஸ்தாபப்படுத்துவதினால் சபைக்கு பிரயோஜனமில்லை. அனைவரும் உற்சாகப்படுத்தப்படவேண்டும். குறிப்பிட்ட அனுபவங்களை கொண்ட சிறு குழு மட்டுமல்ல. செய்தியாளரின் கட்டுப்பாட்டுக்குள் செய்தி இருக்கவேண்டும். பரவசத்தினாலோ ஆக்ரோஸத்தினாலோ மக்களுக்கு தெரியாத ஒன்றை நியாயப்படுத்துவதல்ல செய்தி. கடவுளின் சத்தியம் தெளிவாக ஒழுங்காக முறையாக உணர்வூட்டத்தோடு அறிவோடு ஒவ்வொருவரின் மனதையும் இதயத்தையும் தொடும் நிஜமாக இருக்கவேண்டும். அறிவிக்கப்படும் சத்தியம் மக்களை விடுதலை செய்யும்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்

கூடி வாழும் சபையிலே அவரவருக்குப் பொறுப்புண்டு அந்தந்தப் பொறுப்பை அவரவருக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டுசெயல்பட்டு தேவ நோக்கத்தை சபையில் வெளிக்கொணரs வேண்டும். இப்படி கூட்டுப்பொறுப்பில் இணைந்து தேவ பெலத்தோடு பொது வாழ்வின்...

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்