திட்ட விவரம்

தீர்க்கமான பிராத்தனைகள்மாதிரி

Dangerous Prayers

7 ல் 1 நாள்

உங்கள் பிராத்தனைகள் தீர்க்கமாக ஏன் இருக்க வேண்டும்



பலரை போல நானும் உறுதியாகவும் முனைப்புடனும் பிராதிக்க பல வருடங்களாக போராடினேன். நல்ல நோக்கத்துடன் இருந்தாலும் கூட நான் பிராதிக்கும் பொழுது கவனம் சிதறி, சலிப்பு பல முறை ஏற்பட்டுள்ளது. இளம் ஆயரான எனக்கு ஒரு நண்பர் மாறுதல் தேவை என நம்ப செய்தார். நீண்டகாலமாக நம்பிக்கையற்ற பிராத்தனைகளை சகித்தாலும், இறைவன் என்னிடமிருந்து மேலும் பலதை விரும்பினார் என அறிந்தேன், அவரை மேலும் நெருக்கமாக அறிய விரும்பினேன்.



“கிரேக், இறைவன் இன்னமும் அற்புதங்கள் செய்கின்றார் என நீ நம்புகிராயா?”





“நல்லது – ஏன்னா உன்னோட பிராத்தனைகள் மிக மொத்தையாக இருக்கு"



எனது நண்பனுடன் சிரிக்க முயன்றாலும், அந்த ஏளனம் சரியானது என்பதால் குத்தியது.


அவனது கவனிப்பில் இருந்த உண்மையை உணர்ந்து எதிர் வாதமின்றி நான் வாயடைத்து போனேன். அவன் நான் ஏற்கனவே உணர்ந்த ஆனால் ஒப்புக்கொள்ளாத ரகசியத்தை தான் கூறினான் என்பதால் மறுக்கவில்லை: எனது பிராத்தனைகள் பரிதாபமானவை.



தேய்ந்து போன, மீண்டும் மீண்டும் யூகிக்க கூடிய, பாதுகாப்பான பிராத்தனைகளில் சிக்கியது போல உணரும் எவருக்கும் இந்த திட்டம் உகந்தது.



நாம் கேட்பதற்கும், கற்பனைகும் எட்டாதவற்றை செய்ய கூடிய தெய்வத்திற்கே நாம் சேவகம் செய்கின்றொம். எனவே பாதுகாப்பாக களிக்கப்பதை நிறுத்தும் நேரம் இதுவே. சுகமான வாழ்க்கைகாக நாம் சிருஷ்டிக்க படவில்லை. ஆர்வத்துடனும், மிகுந்த சக்தியுடனும், இந்த உலகத்தை முற்றிலுமாக மாற்ற நாம் விதிக்கப்பட்டுள்ளோம்! எல்லைகளை தகற்கவும், தீர்க்கத்துடன் பிராதிக்க உங்களை தூண்டவும், தைரியமாக வாழவும் இந்த திட்டம் உதவும் என நான் நம்புகிறேன்.

.

பைபிளை மேலும் படிக்கையில், இறைவனுடைய மக்களின் விதவிதமான பிராத்தனைகளை கண்டு நான் வியந்தேன். மிகவும் தனிபட்ட பிராத்தனைகள் – மகப்பேறு வேண்டியும், (1 சாம் 1:27), உணவிற்கும், அன்றாட தேவைகளுக்கும்(மாத் 6:11), எதிரிகளிடமிருந்து தப்பிக்க வேண்டியும்(சங்கி 59:1-2) நடைமுறையான பிராத்தனைகள் அவர்கள் வேண்டினர். சில சமயங்கள் அன்பு நிறைந்த இறைவனிடம் அவர்கள் மென்மையாக குசுகுசுப்பாக பேசினது போல தோன்றும். மற்ற சமயங்களில் வேதனையோடும் விரக்தியுடன் அவரிடம் அலறினார்கள்.



அவர்களுடைய பிராத்தனைகள் கபடமற்ற, துணிச்சலான, அனல் கக்கும், தைரியம் நிறைந்த, நிஜமானவை. ஆனால் நானோ கடவுள் என்னை பாதுகாப்பாக வைக்கவும், எனது பர்கரையும், பொரியலயும் ஆசீர்வதிக்க பிராத்திதேன்.


எனது நண்பன் சொன்னது சரிதான்.


எனது பிராத்தனைகள் மொத்தையானவை.



நீங்கள் ஒரு வேளை தொடர்புபடுத்தலாம். உங்களுக்கு பிராத்தனை மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. உங்களுக்கு உண்டு. ஆனால் தேய்ந்த சுவட்டு பாதையில் சிக்கியுள்ளீர்கள். அதே சமயத்தில் பிராதிக்க முனைந்தால், அதிகம் பிராதிக்க வேண்டும். மேலும் வேட்கையுடன். மேலும் நம்பிக்கையுடன் நீங்கள் பிராதிக்க வேண்டும்.உங்கள் வாழ்க்கைத்துணையுடன் அல்லது நெருங்கிய நண்பருடன் அந்தரங்கமாய் பகிர்வது போல கடவுளிடம் பேசவும், அவர் சொல்வதை கேட்க ஆசை. உண்மையாக அவா இருப்பினும் அதை செய்வது எவ்வாறு என அறியவில்லை.



எனவே உங்கள் தட்டையான, மந்தமான, யூகிக்க கூடிய, மக்கிய, சலிப்பான பிராத்தனைகள் பாதுகாப்பாகவே இருக்கும்.



எனது நண்பனின் விழிப்பு ஓசை எனது பிராத்தனை வாழ்க்கை முறையை மாற்ற உறைப்பித்தது. நெடுங்காலமாக மங்கலான, நம்பிக்கையற்ற, வெறுமையான பிராத்தனைகளை சகித்து கொண்டேன்.என்னிடம் இதனால் என்ன எதிர்பார்க்க பட்டது என தயக்கம் இருந்தாலும், என்னிடம் இறைவன் மேலும் எதிர்பார்த்தார் என அறிந்தாலும், அவரை மேலும் நெருக்கமாக அறிய ஆசைபட்டேன்.

.

இறைவனிடம் நிஜமான, வடுப்படத்தக்க, அந்தரங்கமான பிராத்தனைகளால் உரையாடும் போது அவர் உங்களை ஆன்மீக குமிழி உறையிட்டு பாதுகாத்து வைப்பதில்லை.மாறாக இதில் எனக்கு என்ன உள்ளது என்ற நமது குமிழியை உடைத்து, அடுத்து அவர் என்ன செய்வார் என அறியாமல் இருக்கையில் அவரை அடைகலமடைய அழைப்பார். சில நாட்கள் ஆசீர்வதிக்கபட்டது போல் உணர்வோம். மற்ற தினங்கள் சவாலும், எதிர்ப்புகளும், துன்புறுத்தல்களையும் எதிர்கொள்வோம். ஆனால் தீர்க்கமான பிரார்த்தனையின் ஒவ்வொரு கணமும் அவருடைய அணுக்கம் இருக்கும்.



மேலும் பலவற்றுக்கு நீங்கள் தயாரா? பாதுகாப்பாக விளையாடி நொந்துவிட்டீர்களா? துணிகரமான, விசுவாசம் மிகுந்த, இறை பயமுடைய, வாழ்வை மாற்ற கூடிய, உலகை உறுமாற்ற வல்ல பிராத்தனை செய்ய நீங்கள் தயாரா?



அப்படி எனில் இந்த பைபிள் திட்டம் உங்களுக்காக.



ஆனால் எச்சரிக்கை படுவீர்களாக. தடைகள் இருக்கும். “என்னை தேடுங்கள், என்னை உடையுங்கள், என்னை அனுப்புங்கள்" என பிராத்திக்கும் போழுது நீங்கள் பள்ளத்தாக்குகளையும், தாக்குதல்களையும், சோதனைகளையும், வேதனைகளையும், கஷ்டங்களையும், ஊக்கமின்மையும் அனுபவிப்பீர்கள். மனம் கூட உடைந்து போகலாம். ஆனாலும் கூட விசுவாசத்தின் கூடிய ஆனந்தம், அற்புதங்களின் அதிசயம், சரணாகதியின் நிவாரணம், இறைவனை மகிழ்விக்கும் இன்பம் அதில் இருக்கும்.



பாதுகாப்பான பிராத்தனைகளை நிறுத்தும் நேரம் இதுவே.



இறைவனிடம் பேச, உண்மையாக உரையாடவும், அவர் சொல்வதை கேட்கவும், இதுவே தகுந்த சமயம்.



தீர்க்கமான பிராத்தனைகளுக்கு இதுவே தருணம்.< /p>

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Dangerous Prayers

உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் ...

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்காக நல்லாயர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்