திட்ட விவரம்

சிலுவையும் கிரீடமும்மாதிரி

Cross & Crown

7 ல் 1 நாள்

விலைமதிப்பற்ற இயேசுவின் இரத்தம்



இயேசுவின் இரத்தத்தைப் பற்றி நீங்கள் கடைசியாக பிரசங்கம் கேட்டது எப்போது அல்லது பாடல் பாடியது எப்போது? இந்நாட்களில் சில திருச்சபைகள் இயேசுவின் இரத்தத்தை பற்றி பேசுவதை பயங்கரமானதாகவும் பழமையானதாகவும் நினைக்கின்றனர். "இரத்தத்தை" பற்றிய சில பாடல்களைக் கூட பாடல் புத்தகங்களிலிருந்து நீக்கி விட்டனர். அனால் அவருடைய இரத்தம் இல்லாமல், தேவனுடன் உறவுக்கான நம்பிக்கை இல்லை, இரட்சிப்பின் நிச்சயம் இல்லை, நம் ஜெபங்கள் கேட்கப்படும் என்ற நம்பிக்கை கூட இல்லை.



இரத்தத்தை பற்றி குறிப்பிடுவதற்கு வேதாகமம் கொஞ்சமும் தயங்கவில்லை. சொல்ல போனால், ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரை ஒரு சிவந்த கயிறாக அது பாய்ந்து செல்கிறது. இரத்தத்தைப் பற்றிய குறிப்புகளை வேதாகமத்திலிருந்து நீக்கி விட்டால், எஞ்சியிருப்பதெல்லாம் வரலாறும் இலக்கியமும் தான். தேவன் இவ்வளவு முக்கியமாக நினைப்பதை நாம் ஒரு போதும் அலட்சியப்படுத்தக்கூடாது. 



“மாம்சத்தின் ஜீவன்” இரத்தத்தில் இருப்பதால் தேவன் பாவத்திற்கான பிராயச்சித்தம் செய்ய இரத்தத்தைக் கொடுத்தார் என்று லேவியராகமம் 17:11 சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டில் “பிராயச்சித்தம்” என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை “மூடுதல்” என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. தேவன் ஏற்படுத்திய பலியிடும் முறையாகிய ஆராதனையின் படி, மனிதக்குலத்தின் பாவங்கள் பாவமற்ற மிருகங்களின் இரத்தத்தால் மூடப்பட்டன.



பிரயாசித்தத்தின் பயங்கரமான விலையே பாவத்தின் பயங்கரத்தை நமக்கு காட்டுகிறது. பாவத்திற்கான தண்டனை மரணம். தவறு செய்தவர் அல்லது சரியான மாற்று நபர் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். மீறுதல்களை மூட செலுத்தப்படும் மிருகம் பழுதற்றதாகவும் முழுமையானதாகவும் இருக்க வேண்டும். பலிபீடத்தில் செலுத்தப்பட்ட ஒவ்வொரு பலியும் தேவனின் சட்டத்தின்படி அந்த மரண தண்டனையின் நிறைவேறுதலாக இருக்கிறது.



தேவன் பரிசுத்தமானவர் என்றும், மீறுதல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாவத்திற்கான பிரயாசித்தம் இரத்தத்தின் மூலமாகவே ஏற்படுகிறது என்றும் பலியிடும் முறைமை நமக்குக் கற்பிக்கிறது. இந்த ஏற்பாடு வரவிருக்கும் காரியங்களுக்கு ஒரு முன் நிழலாக இருந்தது. மிருக பலிகள் பாவத்தை மூட மட்டுமே முடியும் என்பதால், மனிதனின் பாவங்களை நீக்க ஒரு "மேன்மையான ஆடு" தேவைப்பட்டது.



ஒரு நாள் யோவான் ஸ்நானகன் யோர்தான் நதிக் கரையில் நின்றுக் கொண்டிருக்கும் போது, “உலகத்தின் பாவத்தைப் போக்கும் தேவ ஆட்டுக்குட்டியானவர்" மனித சரித்திரத்திற்குள் கடந்து வந்தார் (யோவான் 1:29). பாவங்களுக்கான முழுமையான பலி வந்தடைந்தது. அவர் "உலகத்தோற்றத்திற்கு முன் முன்னறியப்பட்டவர்". தன் விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி தேவனின் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்ற வந்தார் (1 பேதுரு1:18-20).



இயேசு வெறும் மனிதன் அல்ல; அவர் மனித சரீரத்தில் போர்த்தப்பட்ட தேவக்குமாரன். அவர் பரிசுத்த ஆவியானவரால் ஒரு கன்னியின் கருவில் கருத்தரிக்கப்பட்டதால் அவர் பிறப்பு இயற்க்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. உலகத் தகப்பன் மூலம் அவருக்கு பாவம் பரிமாற்றப்படவில்லை என்பதால், இயேசு முழுமையான, கரையற்ற தேவ ஆட்டுக்குட்டியாக இருக்கிறார். அவருடைய வாழ்க்கை மட்டுமே குற்றமற்றது, எனவே அனைத்து மனிதக் குலத்தின் பழிக்கும் ஏற்ற ஒரே பலி அவரே.


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Cross & Crown

இயேசு கிறிஸ்து, அவர் தன் சிலுவை மரணத்தின் மூலம் பெற்றுத் தந்த இரட்சிப்பு, மற்றும் உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தம் ஆகியவற்றை நாம் அறிந்துக் கொள்ளவே புதிய ஏற்பாட்டின் அதிகப்பட்சமான பகுதி எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் விலைமதி...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/yv-easter

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்