1
யோவான் 4:24
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இறைவன் ஆவியாய் இருக்கின்றார். அவரை வழிபடுகின்றவர்கள், ஆவியிலும் உண்மையிலும் அவரை வழிபட வேண்டும்” என்றார்.
Karşılaştır
யோவான் 4:24 keşfedin
2
யோவான் 4:23
ஆனால், உண்மையாய் வழிபடுகின்றவர்கள், பிதாவை ஆவியிலும் உண்மையிலும் வழிபடும் ஒரு காலம் வருகின்றது, அது இப்பொழுதே வந்துவிட்டது. ஏனெனில், அவ்விதம் தன்னை வழிபடுகின்றவர்களையே பிதா தேடுகிறார்.
யோவான் 4:23 keşfedin
3
யோவான் 4:14
ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கின்றவனுக்கோ ஒருபோதும் தாகம் எடுக்காது. உண்மையாகவே, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர், அவனுக்குள்ளே ஒரு நீரூற்றாய், நித்திய வாழ்வு வரை ஊற்றெடுக்கும்” என்றார்.
யோவான் 4:14 keşfedin
4
யோவான் 4:10
அதற்கு இயேசு, “நீ இறைவனுடைய கொடையையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். அவர் உனக்கு வாழ்வளிக்கும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்று பதிலளித்தார்.
யோவான் 4:10 keşfedin
5
யோவான் 4:34
இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவாகும்.
யோவான் 4:34 keşfedin
6
யோவான் 4:11
அப்போது அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் அள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கின்றது. வாழ்வளிக்கும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்?
யோவான் 4:11 keşfedin
7
யோவான் 4:25-26
அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வரவிருகின்றார். அவர் வரும்போது, எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள். அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகின்ற நானே அவர்” என்று அறிவித்தார்.
யோவான் 4:25-26 keşfedin
8
யோவான் 4:29
“வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் மேசியாவோ?” என்றாள்.
யோவான் 4:29 keşfedin
Ana Sayfa
Kutsal Kitap
Okuma Planları
Videolar