இயேசு

இயேசு

இயேசு கிறிஸ்துவின் வாழ்கை நிகழ்வுகளின் அடிப்படையில் நாடக ஆவணப்பட முறையில் உருவாக்கப்பட்ட இயேசு (JESUS) திரைப்படம், 1979ல் தயாரிக்கப்பட்டு, அதற்குப் பின்னர் 1,400க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. வரலாற்றில் இதுவரையில் அதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்ட மற்றும் அதிகமாகப் பார்க்கப்பட்ட திரைப்படம் இதுவேயாகும். "The Purpose Driven Life," என்ற புத்தகத்தை எழுதிய போதகர். ரிக் வாரன் அவர்கள் கூறுகையில், 'இயேசு’ திரைப்படமே, இது வரையிலும் கண்டு பிடிக்கப்பட்ட சுவிசேஷ உபகரணங்களில் மிக திறமையான ஒன்று" என்று கூறுகிறார்.450க்கும் மேற்பட்ட சமயத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் இந்த திரைக்கதையின் வரலாற்று மற்றும் வேதாகமத் துல்லியத்தன்மையை பகுத்தாய்வு செய்திருக்கிறார்கள். இந்த திரைக்கதையானது அதிகமாக லூக்கா நற்செய்தி நூலின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. ஆகவே இயேசு பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வேதாகமத்திலிருந்து வருகிறது. 2,000 வருடங்களுக்கு முந்தைய யூதேய மற்றும் ரோம கலாச்சாரங்களை சித்தரிக்க, கடும் முயற்சி எடுக்கபட்டிருக்கிறது. அவையாவன: அக்காலத்தில் உபயோகபடுத்தபட்ட வெறும் 35 வண்ணங்களையே கொண்டு கையால் நெய்யப்பட்ட துணி, முதலாம் நூற்றாண்டில் பின்பற்றின முறையின்படி செய்த மண்பாண்டங்கள், தொலைபேசி மற்றும் மின் கம்பங்களையும் திரைகாட்சிகளில் வராத வண்ணம் அப்புறப்படுத்தப்பட்டன. இயேசு திரைப்படமானது,1979ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிலுள்ள 202 இடங்களில், 5000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் அரேபியர்களைக் கொண்டு படம் பிடிக்கப்பட்டது. முடிந்த வரையிலும் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு, வேதாகம நிகழ்வுகள் நடைபெற்ற அதே இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.