மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்மாதிரி

ஆண்டவர் மறைத்துவைத்திருக்கும் செய்தி என்று ஏதாவது இருக்கிறதா?
பவுல் தன் துன்பம் சாத்தானால் அனுப்பப்பட்டதாகக் கருதினதை நீங்கள் கவனித்தீர்களா? இருப்பினும், இந்த முள் கூட ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறது... இது பவுலின் வாழ்க்கையில் தேவன் தன்னை இன்னும் அசாதாரணமான முறையில் வெளிப்படுத்திக் கொள்ளஉதவியாக இருந்தது.
ஒருவேளை, இந்த வேதனையை ஆண்டவர் உங்களுக்கு அனுமதித்து, அதில் ஒரு அற்புதமான செய்தியை மறைத்து வைத்திருக்கக்கூடுமோ?
உதாரணமாக, உங்கள் சூழ்நிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள் ... வியாதி, கீழ்ப்படியாத பிள்ளை, குடும்ப உறவுகளில் பிரச்சனைகள், உடல் அல்லது மன அளவிலான காயம் ... இவைகளுக்கு மத்தியில் ஆண்டவர் இருக்கிறார்.
அவர் உங்கள் கடிதத்தில் அன்பின் வார்த்தையை அளிக்கிறார்; அது மனதுருக்கத்தால் நிறைந்த ஒரு வார்த்தை, அது மாறாத வாக்குத்தத்தம்... "அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்!" (வேதாகமத்தைப் பார்க்கவும், 2 கொரிந்தியர் 12: 9)
நீங்கள் இப்போது சோதிக்கப்பட்டால், உங்கள் மனச்சோர்வின் ஆதாரம் ஒரு கசக்கப்பட்ட, அழுக்குதபால் உறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் உள்ளே, ஒரு தெய்வீக செய்தி இருக்கிறது, அது அன்பு நிறைந்தது மற்றும் இரக்கம் நிறைந்தது. இன்று அதைக் கண்டுபிடிக்க பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!
வேதம் சொல்கிறது, “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.”
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிவதுபோல் இருக்கிறதா? எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லையா? அல்லது தாமதமாகிறதா? இனி நான் வாழ இயலுமா அல்லது வாழ்ந்து என்ன அர்த்தம் என்று யோசிக்கிறாயா? இந்த திட்டம் உனக்கானது. ஆம் அன்பரே நான் குறிப்பிட்ட அனைத்தும் மன அழுத்தத்தின் (depression) விளைவுகள். ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே இந்த மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு பரிபூரண விடுதலை அளிக்க முடியும். மேலும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்து உங்களை மேன்மையாக வைக்க ஆவலாய் இருக்கிறார். வாருங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளை ஆராய்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/