சகரியா 4:6-10

சகரியா 4:6-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே அவன் என்னிடம், “செருபாபேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: உன் வலிமையினாலும் அல்ல; உன் வல்லமையினாலும் அல்ல. என்னுடைய ஆவியானவராலேயே ஆகும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “மாபெரும் மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலின் முன்பாக நீ சமனான தரையாவாய். அவன்முன் ஒன்றும் தடையாயிருக்காது. அதன்பின், ‘இறைவன் ஆசீர்வதிப்பாராக! இறைவன் ஆசீர்வதிப்பாராக!’ என்ற மக்களின் ஆர்ப்பரிப்புடன் செருபாபேல் ஆலயத்தின் தலைக்கல்லைக் கொண்டுவந்து கட்டிடத்தை முடிப்பான் என்றான்.” அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “செருபாபேலின் கைகளே இந்த ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டன; அவனுடைய கைகளே இதைக் கட்டியும் முடிக்கும். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “இது சிறிய செயல்களின் நாளாய் இருந்தாலும் அதை அவமதிக்க வேண்டாம், ஏனெனில் இறைவன் தமது வேலையின் ஆரம்பத்திலும் மகிழ்ச்சிகொள்கிறார். செருபாபேலின் கையில் தூக்குநூலைக் காணும்போது மனிதர் யாவரும் அகமகிழ்வார்கள். நீ கண்ட இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்த்துக் கண்காணிக்கிற யெகோவாவின் கண்களாகும் என்றான்.”

சகரியா 4:6-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற யெகோவாவுடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். பெரிய மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைசெய்யலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவுடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலை சந்தோஷமாகப் பார்க்கிறது என்றார்.

சகரியா 4:6-10 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு அவன் என்னிடம், “இதுதான் கர்த்தரிடமிருந்து செருபாபேலுக்குச் சொல்லப்பட்டச் செய்தி: ‘உனக்கான உதவி, உனது பலம் மற்றும் வல்லமையிலிருந்து வராது. இல்லை, எனது ஆவியிலிருந்தே உனக்கு உதவி வரும்’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்! அந்த உயரமான குன்று செருபாபேலுக்கு முன்னால் சமநிலமாகும். அவன் ஆலயத்தைக் கட்டுவான். அந்த இடத்தில் மிகவும் முக்கியமான கல்லை வைக்கும்போது ஜனங்கள்: ‘அழகாயிருக்கிறது! அழகாயிருக்கிறது!’ என்று சத்தமிடுவார்கள்.” எனக்கு மேலும் வந்த கர்த்தருடைய செய்தியானது, “செருபாபேல் எனது ஆலயத்துக்கான அஸ்திபாரக்கல்லை இடுவான். செருபாபேலே ஆலயம் கட்டும் வேலையை முடிப்பான். பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை ஜனங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜனங்கள் சிறுதொடக்கத்துக்காக அவமானம் அடையவேண்டாம். செருபாபேல் தூக்கு நூலோடு கட்டி முடித்த ஆலயத்தை அளந்து சோதிப்பதைப் பார்க்கும்போது ஜனங்கள் உண்மையிலேயே மகிழ்வார்கள். இப்பொழுது நீ பார்த்த ஏழு பக்கமுள்ள கல் கர்த்தருடைய ஒவ்வொரு திசையிலும் பார்க்கிற கண்களை குறிக்கும், அவை பூமியின் மேலே எல்லாவற்றையும் பார்க்கின்றன.”

சகரியா 4:6-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.