உன்னதப்பாட்டு 4:6-7
உன்னதப்பாட்டு 4:6-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன். என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.
உன்னதப்பாட்டு 4:6-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பொழுது சாய்வதற்குள், நிழல் மறைவதற்குள், நான் வெள்ளைப்போள மலைக்கும், சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன். என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்; உன்னில் குறைபாடு எதுவும் இல்லை.