சங்கீதம் 96:1-13

சங்கீதம் 96:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும், வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

சங்கீதம் 96:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள். நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன. நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் யெகோவாவுக்கு செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள். அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள். “யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார். வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும். வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும். யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும் மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.

சங்கீதம் 96:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள். யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள். தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர். மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள். பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; பூமியில் உள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். யெகோவா ராஜரிகம்செய்கிறார், ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக. நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும். அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியோடும், மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

சங்கீதம் 96:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும். கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்! அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்! தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள். தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள். கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர். பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே. ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர். அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும். தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும். குடும்பங்களும் தேசங்களும் கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள். கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்! அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை. கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார். விண்ணுலகங்களே! மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமியே! களிகூரு. கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்! வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்! வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்! கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள். கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார். நீதியோடும் நியாயத்தோடும் அவர் உலகை ஆளுகை செய்வார்.