சங்கீதம் 91:1-5
சங்கீதம் 91:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன், எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான். நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன். நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும், கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார். யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்; அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்; அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும். நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.
சங்கீதம் 91:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்
சங்கீதம் 91:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும். சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும். நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை, என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன். மறைவான ஆபத்துக்களிலிருந்தும் ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார். நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும். அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார். தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார். இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை. நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய்.
சங்கீதம் 91:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்