சங்கீதம் 77:10-12
சங்கீதம் 77:10-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வ காலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
சங்கீதம் 77:10-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், எனக்காக செயலாற்றுகிறது, யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன். உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன்.
சங்கீதம் 77:10-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன். யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
சங்கீதம் 77:10-12 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது. ‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன். கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன். தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன். நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன். அக்காரியங்களை நான் நினைத்தேன்.