சங்கீதம் 7:1-5

சங்கீதம் 7:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள். என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; அவன் என்னைத் தரையில் தள்ளி, உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும்.

சங்கீதம் 7:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாததால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)

சங்கீதம் 7:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். என்னை மீட்டுக்கொள்ளும்! நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன். என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது! எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை. நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்! என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை. என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை. ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான். அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான். அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.

சங்கீதம் 7:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும், என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்து பிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா).