சங்கீதம் 66:8-12

சங்கீதம் 66:8-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். எங்களைச் சிறைபிடித்து, எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.

சங்கீதம் 66:8-12 பரிசுத்த பைபிள் (TAERV)

ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள், உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள். தேவன் நமக்கு உயிரைத் தந்தார். தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார். ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார். தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர். எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.