சங்கீதம் 63:6-8
சங்கீதம் 63:6-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன். நீரே என் உதவியாயிருப்பதால், உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
சங்கீதம் 63:6-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன். என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
சங்கீதம் 63:6-8 பரிசுத்த பைபிள் (TAERV)
என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன். நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன். நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்! நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன். என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது. நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
சங்கீதம் 63:6-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது: உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.