சங்கீதம் 62:5-12

சங்கீதம் 62:5-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா) கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத்தக்கதாகப் பலனளிக்கிறீர்.

சங்கீதம் 62:5-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன். என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது; இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார். மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்; இறைவனே நமது புகலிடம். கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே, உயர்குடி மனிதர் வெறும் பொய்யே; தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை; அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள். பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே; களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே; உனது செல்வங்கள் அதிகரித்தாலும், உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே. இறைவன் ஒருமுறை பேசினார், நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்: “இறைவனே, வல்லமை உமக்கே உரியது, ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”; நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும் அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.”

சங்கீதம் 62:5-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் மாயையிலும் லேசானவர்கள். கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.

சங்கீதம் 62:5-12 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது. தேவன் ஒருவரே என் நம்பிக்கை. தேவனே என் அரண். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம். என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது. அவர் எனக்குப் பலமான அரண். தேவன் எனக்குப் பாதுகாவலான இடம். ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்! தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்! தேவனே நமக்குப் பாதுகாவலான இடம். மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது. உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது. தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல் ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள். கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள். திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள். நீங்கள் செல்வந்தரானால் அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார். வல்லமை தேவனிடமிருந்து வருகிறது. என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது. ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.