சங்கீதம் 46:1-3
சங்கீதம் 46:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே. ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும் கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.
சங்கீதம் 46:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)
சங்கீதம் 46:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார். தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம். எனவே பூமி நடுங்கினாலும், மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம். கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும் பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
சங்கீதம் 46:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா)