சங்கீதம் 39:1-3
சங்கீதம் 39:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் இருந்தேன். ஆனால் என் வேதனை அதிகரித்தது; என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்
சங்கீதம் 39:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது; என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
சங்கீதம் 39:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன். என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன். நான் பேச மறுத்தேன். நான் எதையும் கூறவில்லை. ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன். நான் மிகவும் கோபமடைந்தேன். அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
சங்கீதம் 39:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.