சங்கீதம் 26:5-8
சங்கீதம் 26:5-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன். யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உமது துதியைப் பிரசித்தப்படுத்தி, உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன். யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன்.
சங்கீதம் 26:5-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன். யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
சங்கீதம் 26:5-8 பரிசுத்த பைபிள் (TAERV)
அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன். தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன். கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன். கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன். நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன். கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன். மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
சங்கீதம் 26:5-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.