சங்கீதம் 25:4-6
சங்கீதம் 25:4-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்; உமது பாதைகளை எனக்குப் போதியும். உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும். நீரே என் இரட்சகராகிய இறைவன், நாள்முழுதும் நான் உம்மையே எதிர்பார்க்கிறேன். யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும், ஏனெனில் அவை பூர்வகாலமுதல் இருக்கிறதே.
சங்கீதம் 25:4-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.
சங்கீதம் 25:4-6 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும். உமது வழிகளை எனக்குப் போதியும். எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும். நீரே என் தேவன், என் மீட்பர். அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன். கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும். எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
சங்கீதம் 25:4-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கிறதே.