சங்கீதம் 16:7-11

சங்கீதம் 16:7-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

சங்கீதம் 16:7-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது. யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன். ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும். ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும், உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.

சங்கீதம் 16:7-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும். யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

சங்கீதம் 16:7-11 பரிசுத்த பைபிள் (TAERV)

எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன. என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன். என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும். என் உடலும் பாதுகாப்பாய் வாழும். ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர். உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர். சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர். கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும். உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.

சங்கீதம் 16:7-11

சங்கீதம் 16:7-11 TAOVBSIசங்கீதம் 16:7-11 TAOVBSI