சங்கீதம் 122:6-7
சங்கீதம் 122:6-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
சங்கீதம் 122:6-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”
சங்கீதம் 122:6-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும். உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.