சங்கீதம் 113:4-6
சங்கீதம் 113:4-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் எல்லா ஜாதிகள் மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
சங்கீதம் 113:4-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது. நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு? வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
சங்கீதம் 113:4-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
சங்கீதம் 113:4-6 பரிசுத்த பைபிள் (TAERV)
எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது. எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார். வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.