நீதிமொழிகள் 5:3-4
நீதிமொழிகள் 5:3-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்; ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
நீதிமொழிகள் 5:3-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
நீதிமொழிகள் 5:3-4 பரிசுத்த பைபிள் (TAERV)
அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம். ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும்.