எண்ணாகமம் 13:1-14
எண்ணாகமம் 13:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டை ஆராய்ந்து அறிவதற்கு சில மனிதரை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் அதன் தலைவர்களில் ஒருவனை அனுப்பு” என்றார். யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைப் பாரான் பாலைவனத்திலிருந்து அனுப்பினான். அவர்கள் எல்லோரும் இஸ்ரயேலரின் தலைவர்களாயிருந்தார்கள். அவர்களுடைய பெயர்களாவன: ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா, சிமியோன் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகன் சாப்பாத், யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப், இசக்கார் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகன் ஈகால், எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து நூனின் மகன் ஓசேயா, பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகன் பல்த்தி, செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகன் காதியேல், யோசேப்பு கோத்திரத்தானான மனாசேயின் கோத்திரத்திலிருந்து சூசியின் மகன் காதி, தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மியேல், ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாயேலின் மகன் சேத்தூர், நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேசியின் மகன் நாகபி
எண்ணாகமம் 13:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா மோசேயை நோக்கி: “நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார். மோசே யெகோவாவுடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள். அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா. சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத். யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப். இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால். எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா. பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி. செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல். யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி. தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல். ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர். நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
எண்ணாகமம் 13:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயிடம், “கானான் தேசத்தைக் கண்டு வருமாறு சிலரை அனுப்பு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கப்போகும் நாடு இதுதான். குடும்பத்திற்கு ஒரு தலைவன் என்கிற வீதம் 12 கோத்திரங்களில் இருந்தும் 12 தலைவர்களை அங்கு அனுப்பு” என்று கூறினார். கர்த்தருடைய கட்டளைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஜனங்கள் அனைவரும் பாரான் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இந்தத் தலைவர்களை மோசே கானானுக்கு அனுப்பி வைத்தான். ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் குமாரனான சம்முவா; சிமியோனின் கோத்திரத்திலிருந்து ஓரியின் குமாரனான சாப்பாத்; யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் குமாரனான காலேப்; இசக்காரின் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் குமாரனான ஈகால்; எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து நூனின் குமாரனான ஓசேயா; பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் குமாரனான பல்த்தி; செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் குமாரனான காதியேல்; யோசேப்பின் கோத்திரத்திலிருந்து (மனாசே) ஆசின் குமாரனான காதி; தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் குமாரனான அம்மியேல்; ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாவேலின் குமாரனான சேத்தூர்; நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேதியின் குமாரனான நாகபி
எண்ணாகமம் 13:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள். அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா. சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத். யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப். இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால். எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா. பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி. செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல். யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி. தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல். ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர். நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.