நெகேமியா 12:27
நெகேமியா 12:27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள்.
நெகேமியா 12:27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள்.
நெகேமியா 12:27 பரிசுத்த பைபிள் (TAERV)
ஜனங்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் அனைத்து லேவியர்களையும் எருசலேமிற்குக் கொண்டுவந்தனர். லேவியர்கள் தாம் வாழ்ந்த பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கும், லேவியர்கள் தேவனுக்கு நன்றி சொல்லியும், துதித்தும் பாடல்களைப் பாட வந்தனர். அவர்கள் தமது கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்தனர்.