மத்தேயு 12:18
மத்தேயு 12:18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார்; நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே. இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன். இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார்.
மத்தேயு 12:18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.
மத்தேயு 12:18 பரிசுத்த பைபிள் (TAERV)
“இதோ என் ஊழியன். நான் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் இவரை நேசிக்கிறேன்; இவரைக்குறித்து நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் ஆவியை இவர்மேல் அமரச்செய்வேன். இவர் தேசங்களுக்கு (என்) நேர்மையான நியாயத்தைக் கூறுவார்.