யோபு 7:17-19
யோபு 7:17-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.
யோபு 7:17-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும், அவனில் நீர் கவனம் செலுத்துவதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், ஒவ்வொரு வினாடியும் அவனைச் சோதித்தறிவதற்கும் அவன் யார்? நீர் உமது பார்வையை என்னைவிட்டு ஒருபோதும் அகற்றமாட்டீரோ? ஒரு நொடிப்பொழுதேனும் என்னைத் தனிமையில் விடமாட்டீரோ?
யோபு 7:17-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.
யோபு 7:17-19 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்? ஏன் அவனைப் பெருமைப்படுத்துகிறீர்? ஏன் அவனைக் கண்டுக்கொள்கிறீர்? ஏன் அவனைக் கரிசனையோடு காலை வேளைகளில் சந்தித்து, ஒவ்வொரு விநாடியும் சோதிக்கிறீர்? தேவனே, என்னைவிட்டுத் தூர நீர் பார்ப்பதில்லை. என்னைவிட்டு ஒருகணமும் நீர் விலகுவதில்லை.