யோபு 23:8-10
யோபு 23:8-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை. அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை. ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன்.
யோபு 23:8-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
யோபு 23:8-10 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை. நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன். தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை. தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை. ஆனால் தேவன் என்னை அறிவார். அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
யோபு 23:8-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.