எரேமியா 23:5
எரேமியா 23:5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு நீதியின் கிளையை எழுப்புவேன். அவர் ஞானமாய் ஆளுகை செய்யும் ஒரு அரசன். அவர் நாட்டில் நீதியையும், நியாயத்தையும் செய்வார்.
எரேமியா 23:5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 23:5 பரிசுத்த பைபிள் (TAERV)
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது: “காலம் வந்துக்கொண்டு இருக்கிறது. நான் ஒரு நல்ல ‘துளிரை’ எழுப்புவேன். அவன் ராஜா ஆவான். அவன் ஞான வழியில் ஆள்வான். நாட்டில் எது சரியோ நியாயமானதோ, அதைச் செய்வான்.