எரேமியா 14:22
எரேமியா 14:22 பரிசுத்த பைபிள் (TAERV)
அயல்நாட்டு விக்கிரகங்களுக்கு மழையை கொண்டுவரும் வல்லமை கிடையாது. வானத்திற்கு மழையைப் பொழியச் செய்யும் அதிகாரம் இல்லை. நீரே எங்களது ஒரே நம்பிக்கை, நீர் ஒருவரே இவை அனைத்தையும் செய்தவர்.
எரேமியா 14:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பிறநாட்டினரின் பயனற்ற விக்கிரகங்களில் எதுவும் மழையைப் பெய்யப்பண்ணுமோ? ஆகாயங்கள் தாமாகவே மழையைப் பொழிகின்றனவோ? இல்லை; எங்கள் இறைவனாகிய யெகோவாவே! நீரேதான் அதைச் செய்கிறீர். ஆதலால் எங்கள் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. இதையெல்லாம் செய்கிறவர் நீரே.
எரேமியா 14:22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்னிய மக்களுடைய வீணான தெய்வங்களுக்குள் மழையைப் பொழியவைப்பவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டாக்கினீர்.
எரேமியா 14:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.