ஏசாயா 65:17-18
ஏசாயா 65:17-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
ஏசாயா 65:17-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்குவேன். முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை, மனதில் தோன்றுவதுமில்லை. நான் உண்டாக்கப்போகிறதில் நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன்.
ஏசாயா 65:17-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன்.
ஏசாயா 65:17-18 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன். ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள். அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள். எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நான் என்ன செய்யப்போகிறேன்? நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன். அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன்.